சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளம் தீவிரம்! 1,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்!
- Surendran Sumdraraj
- 26 Nov, 2026
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சிலாங்கூரில் 414 குடும்பங்களைச் சேர்ந்த 1,456 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்று 281 குடும்பங்களைச் சேர்ந்த 958 பேர் மட்டுமே அங்கு தங்கியிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 449 பேரும், சிப்பாங் மாவட்டத்தில் 206 பேரும் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் தங்கியுள்ளனர்.
எனினும், கெரியான் மாவட்டத்தில் உள்ள Bukit Merah அணைக்கட்டுப் பகுதியில் சுங்கை குராவ் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. அங்கு நீர்மட்டம் 9.25 மீட்டராகப் பதிவாகியுள்ளது. வழக்கமான அளவு 8.68 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலத்தின் சூக் பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் வெள்ள நிவாரண மையத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

