யாருடைய ஆசைக்காக புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

top-news
FREE WEBSITE AD

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் மீனவர்களுடன் இணைந்து திமுக பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதால் அப்பகுதி மீனவர்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டினார். மீனவ சங்கப் பிரதிநிதிகள் தம்மை சந்தித்து ஆதரவு கோரியதாகவும் அவர் கூறினார்.

தலைமைச் செயலகம் அமைப்பதற்கு வேறு பல இடங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், ஏற்கனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலக பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட வளாகத்தையும் பயன்படுத்தலாம் என்றார்.

மேலும், பட்டினப்பாக்கத்தைச் சுற்றி பள்ளிகள் மற்றும் பல மீனவ குடியிருப்புகள் உள்ளதால், புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *