நாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற வெளிநாட்டவர் கைது!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 6: சபாவில் உள்ள கெனிங்காவில் நாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதற்காக 39 வயது வெளிநாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் குறித்து வைரலான காணொளி தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அது கெனிங்காவ், கம்போங் பாடிகாங்கில் உள்ள ஒரு பணிமனையில் நிகழ்ந்ததைக் கண்டறிந்ததாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் யாம்பில் கராய் தெரிவித்தார்.

சந்தேக நபர் இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், இரும்புக் கம்பியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 428வது பிரிவின் கீழ், விலங்கைக் கொல்வதன் மூலம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்