விஜய் சேதுபதி முதல் சல்மான் கான் வரை – பிக் பாஸ் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு?
- Surendran Sumdraraj
- 08 Sep, 2026
சென்னை, செப். 8 –
இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் முன்னணி பிரபலங்கள் ஒரு சீசனுக்கு பெறும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதன்படி, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு சீசனுக்கு ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்காலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ரூ.125 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் நாகார்ஜுனா ரூ.35 கோடியும், மலையாள பிக் பாஸ் தொகுப்பாளர் மோகன்லால் ரூ.30 கோடியும் பெறுவதாக கூறப்படுகிறது.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கிச்சா சுதீப் ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



