மலாக்கா தேர்தலில் PNவெற்றி பெற்றால், முன்கூட்டியே பொதுத்தேர்தல்! – சம்சூரி
- Shan Siva
- 10 Nov, 2026
கோலாலம்பூர், நவ 10: மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலும் தேசிய முன்னணியும் இணைந்து வெற்றி பெற்றால், மலேசியாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமது சம்சூரி மொக்தார் கணித்துள்ளார்.
இந்த இரு கூட்டணிகளின் வெற்றி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கெக்கால் தெனாங்’ என்ற இணையவழி நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே அது கலைக்கப்படலாம் என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நாடாளுமன்றம் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்தால், 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணி 23 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், பெரிக்காத்தான் நேஷனலை மாநில அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தேசிய முன்னணித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

