பிடிக்கவில்லை என்றால் எங்களை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள் – பிரதமருக்கு ஜாஹிட் ஹமிடி பதிலடி
- Shan Siva
- 21 Jul, 2026
சிரம்பான், ஜூலை 21: தமக்கு பிடிக்கவில்லை என்றால், பாரிசான் நேஷனல் அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக நீக்கலாம் என, துணைப் பிரதமரும் BN தலைவருமான டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் சக அமைச்சர்களை
விமர்சிப்பவர்கள் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறியதற்கு பதிலளித்த
ஜாஹிட், பாரிசானின்
எட்டு
அமைச்சர்களில் யாரும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றார்.
அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் ஒருவரை ஒருவர்
விமர்சித்தால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அது
அவருடைய உத்தரவு. ஆனால், அமைச்சர்களை
நியமித்தவரும், நீக்கும்
அதிகாரம் கொண்டவரும் பிரதமர்தான். எங்களைப் பிடிக்கவில்லை என்றால், நேரடியாக
நீக்கிவிடுங்கள் என்று ஜாஹிட் கூறினார்.
ஆனால், அவர் தங்களை நீக்க மாட்டார் என்றும், ஏனெனில் தாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் கெமாஸ் ஊழியர்களுடன் நடைபெற்ற
நிகழ்ச்சியில் அவர் இதனை கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களை பயன்படுத்தி அரசில் உள்ள
மற்ற அமைச்சர்கள் அல்லது அரசு அதிகாரிகளை விமர்சிப்பவர்கள், தங்கள் பதவிகளில்
இருந்து விலக வேண்டும் என்று பிரதமர் அன்வார் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



