சபா ஆளுநராக ஊழல் குற்றவாளியா? மூடா கட்சி ஆவேசம்!

- Sangeetha K Loganathan
- 17 Dec, 2024
டிசம்பர் 17,
மாமன்னரால் சபாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் Tun Musa Aman மீது 30 ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் Amira Aisya Abdul Aziz தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான ஆட்சி என முழக்கமிட்ட மடானி அரசு, இப்போது சபாவின் ஆளுநராக 30 ஊழல் குற்றச்சாட்டுகளைக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வரை நியமிப்பது என்ன மாதிரியான ஆட்சி என Amira Aisya Abdul Aziz கருத்து தெரிவித்தார்.
ஜொகூரின் Puteri Wangsa சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தாம் முந்தைய தேர்தல்களில் அன்வாருக்கு ஆதரவாக ஊழலை ஒழிப்போம் என முழக்கமிட்டது Tun Musa Aman க்கும் எதிராகத் தான் என அவர் தெரிவித்தார்.இப்போது ஒரே மேடையில் ஆளுநராக Tun Musa Aman இருக்க, பிரதமராக அன்வார் புன்னகையுடன் இருப்பது என்ன மாதிரியான அரசியல் என விமர்சித்தார்.
MUDA mempersoalkan pelantikan Tun Musa Aman sebagai Gabenor Sabah walaupun berdepan 30 tuduhan rasuah. Pemangku Presiden MUDA, Amira Aisya Abdul Aziz, mengkritik tindakan ini sebagai bertentangan dengan prinsip anti-rasuah yang dilaungkan kerajaan Madani.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *