ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றால் RM20,000 பரிசு – எம்.இ.எஸ்.எப் அறிவிப்பு

FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 21-

ஜப்பானில் நடைபெறவுள்ள ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு மலேசிய தேசிய இ-விளையாட்டு அணிக்கும் RM20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மலேசிய மின்னணு விளையாட்டு சம்மேளனம் (MESF) அறிவித்துள்ளது.

MESF தலைவர் நயிம் அல்-அமின் சஹாருதின், இன்று நடைபெற்ற மொபைல் லெஜண்ட்ஸ்: பேங் பேங் (MLBB) மலேசியா புரொஃபஷனல் லீக் (MPL MY) போட்டியின் மூன்றாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பானில் போட்டியிடத் தேர்வு செய்யப்படும் தேசிய இ-விளையாட்டு வீரர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *