ECRL கேபிள் திருட்டில் ஈடுபட்ட ‘Geng Acu’ கும்பல் கைது

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், மே 15-

Kuantan பகுதியில் ECRL ரயில் பாதை கேபிள் திருட்டில் ஈடுபட்டிருந்த “Geng Acu” எனப்படும் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். இந்த கும்பல் கடந்த மார்ச் 7 முதல் ஏப்ரல் 27 வரை நடைபெற்ற ஏழு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பகாங் மாநில துணை போலீஸ் தலைவர் Azry Akmar Ayob தெரிவித்ததாவது, 29 முதல் 44 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் ஏப்ரல் 28 முதல் மே 6 வரை கைது செய்யப்பட்டனர்.

Kampung Pandan, Jaya Gading, Sungai Lembing மற்றும் Beserah பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் மூலம் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“Geng Acu” என அழைக்கப்படும் இந்த கும்பலில் நான்கு பேர் நேரடியாக கேபிள் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஒருவரைத் திருடப்பட்ட கேபிள்களை வாங்கிய நபராக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் ECRL திட்ட பணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல முக்கிய ஆதாரங்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *