குழந்தைகளைக் கடத்தும் GENG YUNAA கும்பல்! நீதிமன்றக் காவல்!
- THINAGAREN SANGGAREN
- 24 Oct, 2026
அக்டோபர் 24,
கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த GENG YUNAA கும்பலை சேர்ந்த 3 பெண்கள் 6 ஆண்கள் அடங்கிய குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்ற விசாரணைக்காக Sesyen நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கைது செய்யப்பட்ட 18 முதல் 43 வயதுள்ள 9 பேரும் மலேசியர்கள் என்றும் அவர்கள் Amirul Razali, Amirul Naim, Joshua Salman, Lai Kok Hoe, Tham Yong Zhi, Seah Joon Keat, Nuraslinda Natasha, Nur Suhada, Muna Razali என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
GENG YUNAA எனும் கும்பல் பாலியல் குற்றங்கள், குழந்தைகள் கடத்தல், போன்ற 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை இன்றுடன் நிறைவடைவதாகவும் SESYEN நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 7 உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையில் கைது செய்யப்பட்ட 9 பேரும் காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கவும் வெளியுறவுத் தொடர்புகளை துண்டிக்கவும் SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

