மலாய் அல்லாதவர்களின் ஆதரவைப் பெற்றவர் பெரிக்காத்தான் தலைவராக வேண்டும்! கெராக்கான் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 11,

பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் பொறுப்பிலிருந்து TAN SRI MUHYIDDIN YASSIN விலகியதைத் தொடர்ந்து அடுத்த தலைவர் யார் என்பது வெளிப்படையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட கட்சியிலிருந்து தலைவர் நியமிக்கப்படுவார் என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிவதாகப் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சியான கெராக்கான் கட்சியின் தலைவர் Datuk Dominic Lau தெரிவித்தார். முகைதீனுக்குப் பதிலாக யார் தலைவராக வந்தாலும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளிலிருந்து வர வேண்டும் என்பதை மட்டுமே தாம் வலியுறுத்தியதாக Datuk Dominic Lau தெரிவித்தார். 

முன்னாள் பிரதமர் மகாதீர் பெரிக்காத்தான் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்கிற கருத்துகள் வெளியானதும் கெராக்கானிடமிருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் கிளம்பியது உண்மை தான் என Datuk Dominic Lau ஒப்புக்கொண்டார். மகாதீருக்கு நாங்கள் எதிரியில்லை ஆனால் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளில் தலைமைத்துவமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்களில் ஒருவர் பெரிக்காத்தனை வழிநடத்த வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகள் இப்போது அதிகரித்துள்ளது. ஆகையால் பல்லின மக்கள், குறிப்பாக மலாய்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவையும் பெற்றவர் பெரிக்காத்தான் தலைவராக வேண்டும் என கெராக்கான் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணியின் உதவித் தலைவருமான Datuk Dominic Lau தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *