ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வரலாற்று வெற்றி

top-news
FREE WEBSITE AD

பெர்லின், செப். 8 –

ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாகாண சட்டமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜெர்மனி அரசியலில் இது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 24 ஆண்டுகளாக அந்த மாகாணத்தை ஆட்சி செய்து வந்த அதிபர் பிரீட்ரிக் மெர்சின் ஆளுங்கட்சி இத்தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி வெறும் 17.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மாறாக, கடுமையான குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளுக்காக அறியப்படும் ஏ.எப்.டி. கட்சி 43.8 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் 83 இடங்களைக் கொண்ட சாக்சனி-அன்ஹால்ட் சட்டமன்றத்தில் ஏ.எப்.டி. 39 இடங்களை கைப்பற்றியுள்ளது. தனித்து ஆட்சி அமைக்க அந்தக் கட்சிக்கு இன்னும் 3 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

எனினும், முக்கிய அரசியல் கட்சிகள் ஏ.எப்.டி.யுடன் கூட்டணி அமைக்க மறுத்துள்ளதால், புதிய அரசு அமைப்பதில் பெரும் இழுபறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *