‘மீசைய முறுக்கு 2’ படத்திலிருந்து ‘கோயிந்தம்மா’ பாடல் அப்டேட்
- Surendran Sumdraraj
- 20 May, 2026
Hiphop Tamizha Adhi இயக்கி நடித்துள்ள “Meesaya Murukku 2” திரைப்படத்திலிருந்து “Goindhamma” என்ற புதிய பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியான “Aura 10/10” மற்றும் “Pappali Pazhamey” பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாடலாக “Goindhamma” வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாடல் நாளை (மே 21) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை Hiphop Tamizha Adhi இயக்குவதுடன் இசையமைத்தும் நடித்துள்ளார். Khushbu Sundar மற்றும் Sundar C தயாரித்துள்ள இந்த படத்தில் Chaithra Achar, Ketika Sharma மற்றும் Ramya Ranganathan ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் Nassar, Karunas, Aadukalam Naren உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



