இறுதி நேர கோலால் சமநிலை கண்டது மென்சஸ்டர் யுனைடெட்
- Tamil Malar (Reporter)
- 11 Feb, 2026
லண்டன், பிப். 11-
வெஸ்ட் ஹாமுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தில் பெஞ்சமின் செஸ்கோ அடித்த கோல், இடைக்கால நிர்வாகியாக உள்ள மைக்கேல் காரிக் தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட்டின் தோல்வியற்ற தொடர் தொடர உதவியது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஸ்டேடியம் லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், டோமாஸ் சோசெக் வெஸ்ட் ஹாமுக்காக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் யுனைடெட் தோல்வியடையும் நிலையில் இருந்தது. ஆனால் ஆட்ட முடிவில் சில விநாடிகள் மட்டுமே மீதமிருந்தபோது, செஸ்கோ கோலை பதிவு செய்து காரிக் அணியைதடுப்பு தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
ரூபென் அமோரிம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்ற காரிக், இதற்கு முன் மான்செஸ்டர் சிட்டி, அர்சனல், புல்ஹாம் மற்றும் டாட்டன்ஹாம் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று யுனைடெட்டின் சவாலை மீண்டும் உயிர்ப்பித்திருந்தார்.
முன்னாள் யுனைடெட் மத்திய வீரரான காரிக் இந்த சீசன் முடியும் வரை அணியை வழிநடத்தவுள்ளதாக கூறப்பட்டாலும், அவரது சிறப்பான தொடக்கம் காரணமாக நிரந்தர நிர்வாகி பதவிக்கான முக்கிய வேட்பாளராகவும் பேசப்பட்டு வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



