தங்கம் கடத்தல் வழக்கு: ஒராண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை – ரன்யா ராவுக்கு ஜாமீன்
- Surendran Sumdraraj
- 23 Apr, 2026
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவுக்கு, ஒராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
2025 மார்ச் மாதத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் சுமார் 14.2 கிலோ தங்கத்துடன் ரன்யா ராவை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணையில், இந்த சம்பவம் பெரிய அளவிலான தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்புடையது என தெரியவந்தது. மேலும், இந்தக் கடத்தல் வலையமைப்பில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ரன்யா ராவுக்கு முன்பே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தாலும், COFEPOSA சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதால், அவர் உடனடியாக வெளியே வர முடியவில்லை. அந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒராண்டு காவல் காலம் முடிவடைந்ததையடுத்து, தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொருளாதார குற்ற விசாரணை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் பேரில் அவர் ஜாமீனில் வெளியேறியுள்ளார். இருப்பினும், இந்த தங்க கடத்தல் வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



