‘சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்’ – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 11 –

சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்றும், அடுக்கு மொழியில் பேசி மக்களை ஈர்த்த காலம் தற்போது மாறிவிட்டதாகவும் தமிழக சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் தனது பதிலுரையின் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் உரிய பதிலை வழங்கியதாகக் கூறினார்.

“சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அடுக்கு மொழியில் பேசி மக்களை ஈர்த்த காலம் எல்லாம் போய்விட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

முன்பு சிறப்பான பேச்சாற்றல் மற்றும் அடுக்கு மொழிப் பேச்சை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாக்களித்த சூழல் இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நிலை மாறிவிட்டதாகக் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *