சிலாங்கூரில் தனிப்பட்ட கடன்களால் அதிகமான ஆசிரியர்கள் திவால்
- Tamil Malar (Reporter)
- 19 Jan, 2026
ஜாசின், ஜன. 19-
சிலாங்கூர் மாநிலத்தில் ஆசிரியர்கள், தனிப்பட்ட கடன்களின் காரணமாக திவாலாக (bankrap) அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களில் மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேசிய திவால்துறை (MDI) தலைமை இயக்குநர் டத்தோ இஷாக் பக்ரி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல், அரச ஊழியர்கள் தொடர்பான திவால்தன வழக்குகளில், சிலாங்கூர் மாநிலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையைப் பதிவுசெய்த மாநிலமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார்.
உண்மையான எண்ணிக்கையை வெளிப்படுத்த முடியாத போதிலும், MDI மேற்கொண்ட ஆய்வுகள், திவாலாக அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களில் ஆசிரியர்களே அதிகமாக இருப்பதை காட்டுவதாக அவர் தெரிவித்தார். இதற்கான முக்கிய காரணம், தனிப்பட்ட கடன்களை (personal loan) சரிவர திருப்பிச் செலுத்தத் தவறியதே எனவும் அவர் கூறினார்.
“இந்தத் தகவல்கள், கடந்த ஆண்டு சிலாங்கூர் மக்களை உள்ளடக்கிய நிதி அறிவுத் திறன் (financial literacy) திட்டத்தின் போது சேகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டவை. அரச ஊழியர்களில் திவாலானவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் மிக அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது,” என்று டத்தோ இஷாக் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



