ஆசிரியர்களே, சக ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருங்கள்! கல்வி அமைச்சர் FADHLINA SIDEK வேண்டுகோள்!
- THINAGAREN SANGGAREN
- 03 Aug, 2026
ஆகஸ்ட் 3,
ஆசிரியர்களிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் சக ஆசிரியர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்கள் அருகில் இருக்கும் ஆசிரியரிடம் ஒருமுறையாவது எப்படி இருக்கிறீர்கள் என கேளுங்கள். அவர்களுடன் உரையாடுங்கள், அவர்களுக்கு ஆதரவாக சில வார்த்தைகள் பேசுங்கள். சிலாங்கூரில் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மனதில் அவர் எவ்வளவு பாரங்களைச் சுமந்திருப்பார் என சிந்தித்து பார்க்கவும் மனம் கனக்கிறது என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.
இந்த சூழலில் அந்த குடும்பத்தின் நிலை அறிந்து, அவர்களுக்கு ஆதரவாகவும் இருங்கள் என ஆசிரியர்களைக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK கேட்டுக்கொண்டார். உங்களுடன் இருக்கும் சக ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்களா? மனநிலை எப்படி இருக்கிறது என்பதைத் தயவு செய்து அறிந்து செயல்படுங்கள். என்னை நம்புங்கள். எந்த சூழலிலும் ஆசிரியர்களைப் புறந்தள்ள மாட்டேன் நான் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நம்பிக்கை அளித்தார். ஆசிரியர்கள் தனியாக இல்லை. அவர்களுடன் நான் இருக்கிறேன். அவர்கள் தனியாக இல்லை, அவர்களுக்கு ஆதரவாக சக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையை நாம் அவர்களுக்குக் கொடுப்பதும் நம் பொறுப்பு என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



