பெண் ஆசிரியைக்கு ஆபாசக் காணொலிகளை அனுப்பிய ஆசிரியர் கைது!

top-news

ஏப்ரல் 16,

ஜொகூரில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியைக்கு ஆபாசக் காணொலிகளின் இணைப்பை அனுப்பிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஆண் ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தொன் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியைக் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் அதே பள்ளியில் பணியாற்றும் 32 வயது ஆண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதை Raub Selamat உறுதிப்படுத்தினார். 

கைது செய்யப்பட்ட ஆண் ஆசிரியர் முகநூல் கணக்கு மூலமாகப் பல பெண்களுக்கு ஆபாசக் காணொலிகளை அனுப்பியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Raub Selamat தெரிவித்தார். இன்று காலை 9 மணிக்கு ஜொகூர் பாரு Majistret நீதிமன்றத்திற்கு 32 வயது ஆண் ஆசிரியர் விசாரிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட காணொலி இணைப்பைத் தற்செயலாகத் தன் உடன் பணியாற்றும் ஆசிரியருக்கு அனுப்பியதாக வாக்குமூலம் அளித்த நிலையில் Majistret நீதிபதி மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

Seorang guru lelaki ditahan kerana menghantar pautan video lucah kepada rakan sekerjanya di Johor. Siasatan awal mendapati dia menghantar video kepada ramai wanita lain juga. Mahkamah Majistret mengarahkan siasatan lanjut dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *