மாணவிக்குப் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது!

- Sangeetha K Loganathan
- 02 Mar, 2025
மார்ச் 2,
12 வயது மாணவியைப் பாலியல் தொல்லை செய்த 30 வயது பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக Sepang மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார். கடந்த 26 பிப்ரவரி பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Dengkil பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் 30 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மாணவிக்குச் சமூக வலைத்தலத்தின் மூலமாகப் பாலியல் செய்திகள் கொண்ட குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Sepang மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman விளக்கமளித்தார்.
Seorang guru berumur 30 tahun ditahan atas dakwaan kegiataan tidak moral terhada anak muridnya. Siasatan awal mendapati mesej yang dihantar melalui media sosial bersifat mencurigakan. Kelaurga mangsa membuat laporan kepada polis dengan bukti yang mencukupi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *