ஆசிரியைத் தற்கொலை! கல்வித்துறை இயக்குநர் பள்ளியில் ஆய்வு!
- THINAGAREN SANGGAREN
- 03 Aug, 2026
ஆகஸ்ட் 3,
பள்ளியில் இளம் ஆசிரியைத் தூக்கிலிட்டு தற்கொலை செய்த விவகாரத்தைக் காவல்துறை விசாரித்து வரும் நிலையில் இன்று காலை கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் DR Azam Ahmad சம்மந்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தார். ஆசிரியையின் உயிரிழப்பு சாதாரணமானது இல்லை, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவும், கல்வி அமைச்சும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீடும் இல்லாமல் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் DR Azam Ahmad தெரிவித்தார்.
இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு உளவியல் அடிப்படையிலான ஆதரவையும் வழங்கவிருப்பதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் DR Azam Ahmad தலைமையிலான ஆய்வுக் குழு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும்படி வலியுறுத்தினார். இந்த சம்பவத்தின் உண்மையானக் காரணத்தை எந்தவொரு பாராபட்சமும் இல்லாது கல்வி அமைச்சும் காவல் துறையும் விசாரிக்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



