“இந்த வெற்றி வீரர்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசு” – கிம் பான் கோன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 14-

ASEAN Club Championship (ACC) 2025-26 தொடரின் இறுதிப்போட்டிக்கு Selangor FC முன்னேறியது, தனது பயிற்சியாளர் காலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும், அது வீரர்கள் வழங்கிய “மிகப்பெரிய பரிசு” என்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் Kim Pan Gon தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிலாங்கூர் அணியின் பொறுப்பை ஏற்ற தென் கொரிய பயிற்சியாளரான கிம் பான் கோனுக்கு, இது இதுவரையிலான சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக மலேசியக் கோப்பை அரையிறுதியில் Kuching City அணியிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்திருந்த சிலாங்கூர், தற்போது ACC இறுதிப்போட்டியை எட்டியிருப்பது அணிக்குப் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *