மரத்தில் இருந்து விழுந்து தாய்லாந்து பெண் மரணம்!

top-news

பெசூட், செப் 23: உலு பெசூட், படாங் புவால், கம்போங் பாசிர் கானான் என்ற இடத்தில், மரத்தில் இருந்து விழுந்து தாய்லாந்து பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

ஹமீதா தேராசிங் மாமோங் என்ற 53 வயது மாது உலு பெசூட்டில் உள்ள கம்போங் லெபான்கெஜோரில் உள்ள உறவினர் வீட்டில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

தாய்லாந்தில் உள்ள யாலா பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு பலத்த காயத்திற்குள்ளான நிலையில் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெசூட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உயரத்தில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹமட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்