அரசு தொடர்புடைய நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்திறன் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு - சபா முதலமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 10 Dec, 2025
கோத்தா கினபாலு, டிச. 10-
சபா மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர், மாநில அரசு தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள் (GLC), சட்டரீதியான அமைப்புகளை, 2026-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எழுத்துப்பூர்வமான செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிக்கைகளை நேரடியாக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனை ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), குழும பொது மேலாளர் (GGM) அல்லது பொது மேலாளர் (GM) ஆகியோரே நேரடியாக அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நடவடிக்கையின் நோக்கம், மாநில அரசு திட்டங்களின் முன்னேற்றம், நிதி நிலைமை, சேவைகளின் திறன், ஒவ்வொரு அமைப்பின் சாதனைகள் குறித்து சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களைப் பெறுவதாகும். இந்தக் கண்காணிப்பு ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கு இன்றியமையாதது” என்று அவர் தெரிவித்தார்.
இன்று கோத்தா கினபாலுவில் நடைபெற்ற சபா மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்பு வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார். இந்தப் புதிய விதிமுறை மாநில அரசின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



