35 ஆண்டுகளுக்கு பின் ரஜினிக்கு ஜோடியாகும் 'தளபதி' பட நடிகை?
- Muthu Kumar
- 23 Mar, 2026
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். விரைவில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய உள்ளது. அதன்பின்னர் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறவுள்ளன.
ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 650 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. இதன் பின்னர் ரஜினி நடித்த கூலி திரைப்படம் ஜெயிலர் அளவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.
இந்த படத்துக்கான நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை 35 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடன் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.இந்நிலையில் ரஜினியுடன் இந்த படத்தில் நடிகை ஷோபனா நடிப்பார் என்று தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளன. முன்னதாக இவர் ரஜினியுடன் 'தளபதி', 'சிவா' போன்ற படங்களில் நடித்திருந்தார்.
குறிப்பாக தளபதி படத்தில் ரஜினியும் ஷோபனாவும் இணைந்து உருவான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடல் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஜோடி 35 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய படத்தில் இணைய உள்ளது எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



