கைவிலங்குகளுடன் ஷம்சுல்! அதுவே என் நேர்மைக்குச் சான்று! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) எந்தவொரு விசாரணையிலும் தாம் தலையிட்டதில்லை என்று இன்று தெரிவித்தார்.  இதில் தனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் விசாரணையும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஷம்சுல் கைவிலங்குகளுடன் ஆரஞ்சு நிற சிறைச்சாலை உடைகள் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது, விசாரணையில் தாம் தலையிடவில்லை என்பதற்கான சான்றாகும் என்று அன்வார் கூறினார்.

ஷம்சுலின் ராஜினாமா தமது அரசாங்கத்தின் நேர்மைக்கு சான்றாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர்  மாஸ் எர்மியேதி சம்சுதின் கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

எம்ஏசிசி விசாரணைக்கு உதவ ஷம்சுல் மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்பு காவலில் வைக்கப்பட்டனர்.

சபா சுரங்க ஊழல் தொடர்பாக தொழிலதிபர் டெய், சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியை மீட்டெடுக்க ஷம்சுலுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 25 அன்று, ஷம்சுல் பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *