தேர்தலில் அன்வாரை எதிர்த்து போட்டியிடுவேன்! – HAMZAH உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 17 Jun, 2026
ஜூன் 17,
அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமரும் பி.கே.ஆர் தலைவருமான Datuk Seri Anwar Ibrahim எந்த நாடாளுமன்றத்தில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக WAWASAN கட்சியின் வேட்பாளராக எதிர்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin நேரடியாகப் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Seri Anwar Ibrahim அடுத்த பொதுத் தேர்தலில் தம்பூனிலேயே போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நானே போட்டியிடுவேன் என Datuk Seri Hamzah Zainudin சவால் விடுத்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் லாருட் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு நான் பெற்ற வெற்றியை விடவும் அன்வாரைத் தேர்தலில் வீழ்த்துவதே என்னுடைய ஒரே இலக்கு என Datuk Seri Hamzah Zainudin வெளிப்படையாக அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால், வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் தொகுதியில் நான் போட்டியிடலாம். ஆனால், என்னுடைய இலக்கு அன்வாரை வீழ்த்துவது. அதற்கு மற்றவரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அன்வாரை எதிர்த்து களத்தில் நானே இறங்குவது என முடிவு எடுத்துள்ளதாக Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



