ஹம்சாவை ஆதரித்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! – AZMIN ALI எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 16,

பெர்சத்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிக்கும்  Datuk Seri Hamzah Zainudinக்கு ஆதரவாகப் பெர்சத்து உறுப்பினர்கள் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராகப் பெர்சத்து கட்சியின் தலைமை கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என பெர்சத்துவின் பொதுச் செயலாளர் Datuk Seri Azmin Ali எச்சரிக்கை விடுத்துள்ளார். Datuk Seri Hamzah Zainudin-ஐ நீக்கியது தவறு என பெர்சத்துவின் உறுப்பினர்கள் எண்ணினால் ஒரு பெர்சத்து உறுப்பினராகத் தலைமைக்கு வலியுறுத்துங்கள். அது தான் பொறுப்பான உறுப்பினர்களுக்கான அடையாளம் என பெர்சத்துவின் பொதுச் செயலாளர் Datuk Seri Azmin Ali பெர்சத்து உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார்.

பெர்சத்துவில் பிளவை ஏற்படுத்தும் எந்தவொரு நபரையும் பெர்சத்துவின் தலைமை அங்கீகரிக்காது என Datuk Seri Azmin Ali தெரிவித்தார்.  Datuk Seri Hamzah Zainudin எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பில் இருக்கிறார். பெர்சத்துவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும்  Datuk Seri Hamzah Zainudin திகழ்கிறார். ஆனால் கட்சியின் தலைமைக்கு எதிராக  Datuk Seri Hamzah Zainudin செயல்பட்டது துரோகம். அந்த துரோகத்திற்குப் பெர்சத்து உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டாம் என Datuk Seri Azmin Ali கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *