நான் ராஜினாமா செய்திருக்க வேண்டும்! Hannah Yeoh வருத்தம்!
- THINAGAREN SANGGAREN
- 11 Nov, 2026
நவம்பர் 11,
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் உடனடியாக பதவி விலகும் முடிவுக்கு, டிஏபி கட்சியின் தேசிய விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் ஹன்னா யோ வருத்தம் தெரிவித்துள்ளார். உண்மையில் நான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். கூட்டத்தில் என்னுடைய ராஜினாமாவை முன்மொழிந்தேன். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் முறையில் Anthony Loke தாமாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சராகவும் இருக்கும் ஹன்னா இயோ தெரிவித்தார்.
DAP கட்சி அன்வாருக்கு ஆதரவு வழங்குவோம் என அவருக்குச் சத்தியம் செய்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் என DAP கட்சியின் அனைவரும் வாக்குறுதி அளித்திருக்கிறோம். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றவும், மக்களுக்கான நல்லாட்சியை வழங்கவும் அந்தோணி லோக் ஒருவர் மட்டும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என Hannah Yeoh வருத்தத்துடன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

