தனுஷ், வெற்றி ரெண்டு வாத்தியார்களின் கண்டுபிடிப்பு கென் - ஜிவி பிரகாஷ்!
- Muthu Kumar
- 14 Mar, 2026
கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பேசிய போது "ரெண்டு ஸ்ட்ரிக்ட்டான டைரக்டரிடம் இருந்து வரும் பேக் பென்ச் ஸ்டூடெண்ட் ஒரு இளைமையான படம் செய்திருக்கிறார். பெரிய பெரிய சீனியர்ஸ் உடன் பணியாற்றிவிட்டு, சின்ன பசங்களோடு வேலை செய்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எனக்கு தனுஷ் சார், வெற்றி சார் மூலமாக தான் கென் பழக்கம். அசுரன் படத்தில் கென் காட்சிகளை பார்த்த பின், இவர் இன்னும் உடல் இளைக்க வேண்டும், க்ளோஸ் அப் காட்சிகளை திரும்ப எடுங்க வெற்றி என நான் கூறவும், கென்னை ஓட விட்டிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவரை நான் டார்சர் செய்தேன். அதுக்கு பதில் டார்சரை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் செய்தார். அதன் பாடல்களை கேட்டுவிட்டு கென் பிடிக்கவில்லை என சொல்கிறான் என தனுஷ் கால் பண்ணி சொல்வார்.
ஒருநாள் அவனை பார்த்த போது இதை கேட்டால், அண்ணா எனக்கு பிடிக்கலண்ணா என கூறினான். அந்த மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கென். டார்லிங் படம் நடிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தவர் கருணாஸ் சார். தம்பி நான் புது நடிகருடன் இணைந்து நடித்தாலே அந்தப் படம் பெரிய ஹிட் ஆகும் என்பார். அவருடைய மகன் படம் என்பதால் இதில் பணியாற்ற நினைத்தேன். ஒரு ஜாலியான படம் செய்திருக்கிறோம். அதை பார்த்துவிட்டு சொல்லுங்கள். தனுஷ், வெற்றி ரெண்டு வாத்தியார்களின் கண்டுபிடிப்பு கென், மிஸ்ஸாக மாட்டார்." என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



