வாடிகன் நூலகத்தில் பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சி – போப் லியோ நெகிழ்ச்சி

top-news
FREE WEBSITE AD

ரோம், செப். 15 –

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ 14-ஆவது, தனது 71-ஆவது பிறந்தநாளை வாடிகன் நூலகத்தில் கொண்டாடினார். இந்த சிறப்பான நாளில் வாடிகன் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

கொரோனா காலத்தில் வாடிகன் பணியாளர்களின் சம்பளத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குறைப்புகளை ரத்து செய்வதாக போப் லியோ அறிவித்தார். வாடிகனின் நிதி நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிகன் ஆவணகம் மற்றும் நூலகத்தில் உள்ள ஆவணங்களை நகருக்கு வெளியே மாற்றும் முந்தைய திட்டத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். அதற்குப் பதிலாக, வாடிகன் நகருக்குள்ளேயே புதிய கட்டிடம் அமைத்து ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் ஆன பிறகு முதல் முறையாக வாடிகன் நூலகத்தை பார்வையிட்ட லியோ, அங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். தனது தாய் நூலகராக பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், “வாடிகன் நூலகத்தில் பிறந்தநாளை கொண்டாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *