எரிபொருள் விலை குறைப்பு: RON97, மானியமில்லா RON95, டீசல் லிட்டருக்கு 5 சென் குறைந்தது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 6-

 மலேசியாவில் ஆகஸ்ட் 6 முதல் 12 வரை அமலில் இருக்கும் புதிய எரிபொருள் விலையின்படி, RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 பெட்ரோல் மற்றும் மானியமில்லா டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு (MOF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிய விலைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, RON97 ஒரு லிட்டர் RM4.35, மானியமில்லா RON95 ஒரு லிட்டர் RM3.77, மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் RM4.57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலரைத் தாண்டியிருந்தாலும், தானியங்கி விலை நிர்ணய முறை (APM) கணக்கீட்டு காலத்தின் இறுதியில் உலக சந்தை விலை குறைந்ததால், மானியமில்லா எரிபொருட்களின் விலையை குறைக்க முடிந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *