ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை: ஹாசான் அப்துல் கரீம்
- Surendran Sumdraraj
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 5 –
மக்கள் நீதி கட்சியின் (PKR) மூத்த தலைவரும், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினருமான Hassan Abdul Karim, ஜொகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் (PRN16) போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
75 வயதை எட்டியுள்ள தாம் தற்போது ‘டைனோசர் தலைமுறையை’ சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட ஹாசா அப்துல் கரீம், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாகக் கூறினார்.
“நான் ஏற்கனவே வயதானவன். தற்போது டைனோசர் தலைமுறையைச் சேர்ந்தவராகிவிட்டேன். இந்த வயதிலும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்காது. அது தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அடுத்த பொதுத் தேர்தலில் பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியை தாம் மீண்டும் பாதுகாக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்த ஹாசான், அரசியலில் புதிய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயர்கல்வி பெற்ற இளம் தலைவர்கள் அரசியலில் முன்னிலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக Rafizi Ramli, Khairy Jamaluddin, Nik Nazmi Nik Ahmad, Syed Saddiq Syed Abdul Rahman மற்றும் Nurul Izzah Anwar போன்ற இளம் தலைவர்கள் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



