பி.கே.ஆர் HASSAN KARIM பிடிவாதக்காரர்! ஆனால்......-அன்வார் கருத்து!
- THINAGAREN SANGGAREN
- 06 Apr, 2026
ஏப்ரல் 6,
பி.கே.ஆரின் வலிமையானத் தலைவர்களில் ஒருவர் HASSAN KARIM என்றாலும் அவரைச் சமரசம் செய்வது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல என பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான Dato' Seri Anwar Ibrahim தெரிவித்தார். சமீபத்தில் பி.கே.ஆரின் உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான ரமணன் மேடையில் பேசும் போது பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹசான் காரிம் பேசியதில் நியாயம் இருக்கிறது. அவர் வலியுறுத்தியது நியாயமாகவே இருந்தாலும் அவர் பேசிய இடமும் அந்த சூழலும் அதற்கானது அல்ல என அன்வார் தெரிவித்தார்.
ஹசான் காரிம் சிறந்த போராட்டவாதி, பிடிவாதக் குணமுடையவர். ஆனால் நியாயமானவர். எளிதாக அவர் யாருடனும் ஒன்றி விடமாட்டார். தள்ளியே இருப்பார். நான் என்னுடைய குணங்களை ஹசான் காரிமிடம் காண்கிறேன். அவர் கொள்கை பிடிப்பு மிக்கவர். அதனால் தான் அவர் கோபமடைகிறார். அவருடைய கோபம் எந்த இடமாக இருந்தாலும் வெளிப்படும். அவருடைய வார்த்தை எல்லோரையும் காயப்படுத்தினாலும் அந்த வார்த்தை நியாயமானதாக இருக்கும். ஹசான் காரிம் போல 10 பேர் என் கட்சியில் இருந்தால் நான் சோர்ந்து போய் விடுவேன் ஆனால் பி.கே.ஆருக்கு ஹசான் கரீமைக் கட்சி இழக்காது என பிரதமர் Dato' Seri Anwar Ibrahim வெளிப்படையாக ஹசான் கரீமைப் பற்றி கருத்து தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



