நஜிப்பின் வீட்டுக்காவல் விதிமுறைகள் என்ன? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்தல்!
- Shan Siva
- 07 Nov, 2026
கோலாலம்பூர், நவ 7: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக்காவல் தண்டனை தொடர்பான சட்ட விதிமுறைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டுக்காவலில் இருப்பவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாமா, அல்லது சிறைக் கைதிகளுக்கு இருப்பதைப் போன்ற கடுமையான விதிமுறைகள் அவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வீட்டுக்காவல் என்றால் என்ன என்பது குறித்துத் தங்களுக்கு ஏற்கெனவே தெளிவில்லை என்று தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட முகைதீன், வீட்டுக்காவலில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பியபடி செயல்பட முடியுமா அல்லது அவர்களது நடமாட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளனவா என்ற கேள்வி எழுப்பினார்.
மேலும், வீட்டுக்காவலுக்கென தனியான சட்டம் அல்லது குறிப்பிட்ட விதிமுறைகள் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
நேற்று மலாக்கா மாநிலத்தின் தங்கா பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை உடாங் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

