என்னவானார் ஜஸ்லிண்டா?! 11-வது நாளாகத் தொடரும் சோகம்
- Shan Siva
- 03 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 3:தாப்பா அருகே குனோங்க் பத்து பூத்தே பகுதியில் காணாமல் போன 49 வயதான மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா சலுதீனைத் தேடும் மற்றும் மீட்கும் (SAR) பணி, சிறிய அளவில் தொடரும் என்று காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
11-வது நாளாக இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும்,
ஜஸ்லிண்டாவைக்
கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர் என்று தாப்பா மாவட்ட காவல்துறைத்
தலைவர், கண்காணிப்பாளர் அப்துல் மாலிக் ஹசிம் கூறினார்.
தற்போது இந்தத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில்
பல்வேறு முகமைகளைச் சேர்ந்த 116 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்
கூறினார்.
இருப்பினும், இனி வரும் காலங்களில், இந்தத் தேடுதல் பணி முறைப்படுத்தப்பட்டு, முதன்மையாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, வனத்துறை, அப்பகுதி மக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் (NGOs) மேற்கொள்ளப்படும் என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



