பெரிய இதயம் கொண்ட ஒருவரின் மன்னிப்பு அது! நஜீப் மன்னிப்பு குறித்து பகாங் மந்திரி பெசார்

top-news

பெரிய இதயம் கொண்ட ஒருவரின் மன்னிப்பு அது! நஜீப் மன்னிப்பு குறித்து பகாங் மந்திரி பெசார்

குவாந்தான்: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பகிரங்க மன்னிப்பு கேட்டது அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சி அல்ல என்று 
 டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் அந்த மன்னிப்பு அறிக்கை  உண்மையாகவே செய்யப்பட்டது என்றும் இதயத்திலிருந்து வந்தது என்றும் தாம் நம்புவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில கட்சிகள் நஜிப்பை சாதகமாக்கிக் கொண்டாலும், அந்த அறிக்கை நஜிப்பின் நல்ல நோக்கத்தை பிரதிபலிப்பதாக வான் ரோஸ்டி மேலும் கூறினார்.

மலேசியர்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்பது அனுதாபத்திற்காக அல்ல, மாறாக ஒரு பெரிய இதயம் கொண்ட ஒருவரின் செயல்களை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

நஜிப் விடுவிக்கப்படுவார் என்றும், 1எம்டிபி ஊழலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளுக்கு எதிராக நீதி வெல்லும் என்றும் தாம்  நம்புவதாகவும் பகாங் மந்திரி பெசாருமான அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்