என்னவாகும் பெர்சாத்து? பாஸ் அவசரக் கூட்டம்!
- Shan Siva
- 24 May, 2026
கோலாலம்பூர், மே 24: பெர்சாத்துவுடனான கூட்டணியைக் கேள்விக்குட்படுத்தி கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து, அக்கட்சியுடனான தனது உறவு குறித்து முடிவெடுக்க பாஸ் கட்சி அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவிதுள்ளார்.
பெரிகாத்தான் நேஷனலுக்குத் தெரிவிப்பதற்கு முன்பு, கட்சித் தலைமை முதலில் கட்சிக்குள்ளேயே ஒரு முடிவை எடுக்கும் என்று அவர் கூறினார். கெராக்கானின் 58வது வருடாந்திர தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹாடியின் கருத்துக்கள் பெர்சாத்து மீதான கட்சியின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றனவா என்று தக்கியுதீனிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக பெர்சாத்துவின்தொடர்ச்சியான நடவடிக்கைகளை பாஸ் கட்சி ஏற்காத நிலையில், முகைதீன் யாசின் தலைமையிலான கட்சி இல்லாமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, பெர்சாத்துவுடனான தனது உறவை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வருவதாக ஹாடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



