அது பரவாயில்லை! எங்களுக்கு சொந்த பலம் இருக்கு! - முகைதீன்

top-news
FREE WEBSITE AD

 பாகோ, ஜூன் 27: மாநிலத் தேர்தலில் பெர்சத்து வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தனது தேர்தல் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற பாஸ் கட்சியின் முடிவால் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தமக்கு அது குறித்துக் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சியின் தலைவரும், பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், ஜூலை 11 தேர்தலில் இரு கட்சிகளும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் போட்டியிட்ட போதிலும், பாஸ் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அது பரவாயில்லை. யார் உதவ விரும்புகிறார்கள் என்று நான் கேட்கவில்லை. யாராவது உதவ விரும்பினால், உதவட்டும் என்று கூறினார்.

கொள்கையளவில், பெரிகாத்தான் நேஷனல் உறுப்பினர்களிடையே பரஸ்பர உதவி இருக்க வேண்டும் என்றாலும் இது பொருந்தும் என்றார்.

இருப்பினும், உதவ விரும்பாத கூட்டாளிகள் இருந்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். இதுவரை, நாங்கள் எங்கள் சொந்த பலம், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் வாக்காளர்கள் தங்கள் முடிவை எப்படி எடுப்பது என்பதை அறிவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *