அது முகைதீனின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! ஒரு பேனா போதும் அவருக்கு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜன 3: பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் பதவியில் இருந்து முகைதீன் யாசின் ராஜினாமா செய்தது "யாரும் எதிர்பார்த்திராத ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று பெர்சாத்து  ரெட்சுவான் யூசோஃப் தெரிவித்தார்.  இது கூட்டாளிகள் மற்றும் விமர்சகர்கள் இருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய "கணக்கிடப்பட்ட நடவடிக்கை" என்று பாராட்டினார்.

பெர்லிஸில் சமீபத்திய அரசியல் கொந்தளிப்பால் முன்னாள் பிரதமரின் முடிவு தூண்டப்பட்டது என்ற கூற்றுகளை ரெட்சுவான் நிராகரித்தார். அதற்கு பதிலாக முகைதீன் நீண்ட காலமாக "பரந்த திட்டத்தின்" படி செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினார்.

 பிஎன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதன் மூலம், முகைதீன் பெர்லிஸ் நெருக்கடி ஒரு தேசிய பிரச்சினையாக மாறுவதைத் தடுத்தார். அதே நேரத்தில், பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து தன்னைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் ‘கலகக்காரர்களின்’ முயற்சிகளை அவர் முறியடித்துள்ளார்.

 இதையெல்லாம் அவர் ஒரு பேனாவால் செய்தார்  என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் பொதுப்பணித்துறை  முன்னாள் அமைச்சருமான அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.

 முகைதீனின் ராஜினாமா, பெரிக்கத்தானுக்கு மக்களின் ஆதரவில் அதன் தாக்கத்தை கவனமாகப் புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்ட ஒரு சூதாட்டம் என்று கட்சியின் தகவல் மற்றும் இளைஞர் தலைவர்கள் உட்பட பாஸ்-இல் உள்ள சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் ரெட்சுவான் நிராகரித்தார்.

 மாறாக, இந்த ராஜினாமா, பெர்சாத்துவை வலுப்படுத்துவதில் தனது சக்தியை முகைதீன் செலுத்த அனுமதித்துள்ளது என்றார்.

 ராஜினாமா செய்வதன் மூலம், பெரிக்காத்தானை வழிநடத்தும் சுமையை முழுவதுமாக பாஸ் தலைமையின் மீது மாற்றியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

 2018 முதல் 2022 வரை அலோர் காஜா எம்.பி.யாக இருந்த ரெட்சுவான், அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை ஈர்க்கும் பணி இப்போது பாஸ் கட்சியின் தோள்களில் என்பதால் அதில் சிரமம் இருக்கும் என்று தெரிவித்தார்.

 பாஸ் பெரிக்காத்தானின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, முகைதீன் தலைமை இல்லாததால் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை கட்சியைக் கடந்து பெரிக்காத்தானை  ஆதரிக்கச் செய்யும் திறன் கேள்விக்குறியாக உள்ளது  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *