நாட்டை ஆளும் வேலை இருக்கு! அதில்தான் இப்போது என் கவனம்! - தேர்தல் குறித்த கேள்விக்கு அன்வார் பதில்
- Shan Siva
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4: நாட்டை ஆளும் தனது கடமைகளை நிறைவேற்றுவதிலேயே ஒற்றுமை அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். தேர்தல் குறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
2026 எரிசக்தி மாற்ற மாநாட்டில் செய்தியாளர்கள் அணுகியபோது, ஜொகூர் தேர்தலுடன் ஒரே நேரத்தில் 16வது பொதுத் தேர்தலை (GE16) நடத்துவதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற யூகங்களை அன்வார் நிராகரித்தார்.
மாநில சட்டமன்றத்தைக் கலைக்கக் கோருவது ஜொகூர் அரசாங்கத்தின் முடிவு. நாங்கள் எங்கள் பணியில் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்களன்று ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோருவாரா என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வாரிடம் கேட்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில், 16-வது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த, அன்வார் அழைப்பு விடுப்பார் என்று யூகங்கள் நிலவுகின்றன.
16-வது பொதுத் தேர்தல் பிப்ரவரி 2028 வரை அவகாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



