அய்யோ நான் அப்படி கூறவில்லை! சனுசி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26:  கடந்த வியாழக்கிழமை ஒரு பொதுக்கூட்டத்தில் தான் ஆற்றிய உரையை, சில தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்துக்கூறியுள்ளதாக பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் சனுசி நோர் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தனது அறிக்கை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அமைந்தது என்றும், அது வேண்டுமென்றே திரித்துக்கூறப்பட்டுள்ளது என்றும் சனுசி வலியுறுத்தியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

விவரங்கள் தெளிவாக இருந்தன. தான் சொன்னதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, தங்களது சொந்த விளக்கத்தைச் சேர்த்து, அதை ஒரு பிரச்சினையாக மாற்றி, வேண்டுமென்றே திரித்துக்கூறியுள்ளனர் என்று சனுசி குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக மக்களுக்கு மலாய் மொழி புரியும். அரசியல் ஆதாயம் பெறுவதற்கும் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கும் இது பரபரப்பாக்கப்படுகிறது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *