சட்டமன்றத்தில் கடும் அமளி – எதிர்ப்புக்கு மத்தியில் பதிலுரையை நிறைவு செய்த முதலமைச்சர் விஜய்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 7 –

தமிழக சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை வழங்கியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தனது பதிலுரையில், சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவல் மரணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் பேசினார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, முந்தைய தி.மு.க. ஆட்சி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளையும் விஜய் தனது உரையில் முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதுடன், பேச அனுமதி கோரினர்.

கடும் அமளி நீடித்தபோதிலும், முதலமைச்சர் தனது பதிலுரையை முழுமையாக நிறைவு செய்தார்.

பின்னர் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *