கேபிள் திருடச் சென்று அணையில் விழுந்த மாண்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது!
- Shan Siva
- 04 Mar, 2026
ஈப்போ, மார்ச்4 : உலு கிந்தாவில் உள்ள சுல்தான்
அஸ்லான் ஷா அணையில் விழுந்த ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய பாதிக்கப்பட்டவரின்
உடல், அவர் விழுந்த
இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில்
கண்டெடுக்கப்பட்டது.
பேராக் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது புதன்கிழமை (மார்ச்
4) காலை 11.22 மணிக்கு கண்டுபிடிப்பு தொடர்பாக தங்களுக்கு அழைப்பு
வந்ததாக தெரிவித்தார்.
தம்பூன் தீயணைப்பு
நிலையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக இடத்திற்கு அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் உடல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, ஈப்போ காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அபாங்
ஜைனல் அபிடின் அபாங் அகமது, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB)
துணை மின்நிலையத்திலிருந்து கேபிள் திருட்டில்
ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் அணையில் விழுந்ததாக தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27)
அதிகாலை 12.40 மணியளவில் கேபிள் திருட்டு குறித்து தஞ்சோங் ரம்புத்தான்
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
மற்றொரு சந்தேக நபரும்
அணையில் விழுந்து மீட்கப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



