காருக்குள் அடைபட்டிருந்த சிறுவன் மீட்கப்பட்டான்!

top-news


கோத்த கினபாலு, நவம்பர் 1: சபா சண்டகானில் காருக்குள் அடைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுவனை மீட்க தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் உள்ள லோரோங் ஸ்ரீ தமன் 4 இல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.29 மணிக்கு வந்த அழைப்பின் மூலம் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

சண்டகான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர், பூட்டியிருந்த எஸ்யூவியின் கதவைத் திறந்து சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.

அதிக ஆபத்துகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, பிற்பகல் 2.46 மணிக்கு மீட்புப் பணி நிறைவுற்றது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்