நாட்டின் மொத்த வர்த்தகம் 1.127 டிரில்லியனாக அதிகரிப்பு
- Shan Siva
- 21 May, 2026
கோலாலம்பூர், மே 21: மலேசியாவின் மொத்த வர்த்தகம் 2026 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.3% உயர்ந்து RM1.127 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி 19% அதிகரித்து RM609.31 பில்லியனாகவும், இறக்குமதி 11.1% அதிகரித்து RM517.4 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது என்று மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகமான Matrade ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தக்
காலகட்டத்தில் இதுவரை இல்லாத மிக உயர்ந்த மதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு ஆசியாவில் அதிகரித்த புவிசார் அரசியல்
நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் மலேசியா இந்த சாதனையைக் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலேசியாவின் வர்த்தகப் பன்முகப்படுத்தல் தன்மை ஒரு
உயர் வளர்ச்சிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



