பெரிகாத்தான் நேஷனல் எங்களுடையது! பாஸ் பயன்படுத்தக்கூடாது! - பெர்சாத்து நினைவூட்டல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 15: பெரிகாத்தான் நேஷனலின் முடிவுகளுக்கும் அதன் நோக்கத்திற்கும் எதிராகச் செயல்பட பாஸ் கட்சி முடிவு செய்தால், அது பெரிகாத்தான் நேஷனலின் சின்னத்தைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்று பெர்சத்துவின் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயில் அஜீஸ் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனலை நிறுவுவதற்கான யோசனை பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசினிடமிருந்து வந்தது என்றும், பெரிகாத்தான் நேஷனலின் அரசியலமைப்பு மற்றும் சின்னத்தை வகுத்து, கூட்டணியைப் பதிவு செய்ததும் பெர்சாத்துதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டணியின் அரசியலமைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒரு கட்சி பெர்சாத்துவுடனான உறவைத் துண்டித்து, கூட்டு முடிவுகளுக்குக் கட்டுப்பட மறுத்து, பெரிகாத்தான் நேஷனலின் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் இல்லை என்றால், அது உண்மையிலேயே பெரிகாத்தான் நேஷனலை வலுப்படுத்த விரும்புகிறதா அல்லது வேறு திசையில் செல்கிறதா என்று மக்கள் கேட்பது நியாயமே என்று அவர் தெரிவித்தார்.

பெரிகாத்தான் நேஷனல் உருவாக்கப்பட்டதன் அடிப்படையையே பலவீனப்படுத்திக்கொண்டு, அதன் சின்னத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதை விட, உங்கள் சொந்த அடையாளத்தின் அடிப்படையில் போட்டியிடுவது அதிக நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று, ஹம்ஸா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது புதிய கட்சியான பார்ட்டி வவாசன் நெகாரா வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பிஎன் சின்னத்தைப் பயன்படுத்தும் என்றும் அறிவித்ததைத் தொடர்ந்து துன் ஃபைசால் இஸ்மாயில் அஜீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *