பேராக் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான முதல் புட்சால் கால்பந்து போட்டி!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

மஞ்சோங், ஜுன் 10-

பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கியிைலான முதல் புட்சால் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளியும், பெண்கள் பிரிவில் புருவாஸ் தமிழ்ப்பள்ளியும் சாம்பியனாக வெற்றி பெற்றன.

முதன் முதலாக நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 தமிழ்ப்பள்ளிகளும், பெண்கள் பிரிவில் 14 தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்றன.இதில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் முதல் நான்கு குழுக்களும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் முதல் இரு குழுக்களும் பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய அளவில் அடுத்த வாரம் கெடாவில் நடைபெறும் புட்சால் போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளனர் என்று ஏற்பாட்டுக்குழு தலைவரும், பியுசர் ஸ்டார் விளையாட்டு மன்றத் தலைவருமான பயிற்சியாளர் லிம் கூறினார்.




இந்த புட்சால் போட்டி சிறப்பாக நடைபெற புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் இப்போட்டியை தொடக்கி வைத்தபோது 18 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தார். பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை உணர்வு மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மக்களின் தேவைகளை அறிந்து மக்களின் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.தற்போதைய மடானி அரசாங்கம் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருவதை டத்தோ ஙே கூ ஹாம் சுட்டிக்காட்டினார்.

மக்களின் தேவைகளை அறிந்து உதவிகள் வழங்கும் பொருட்டு பி40 குடும்பத்தாருக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரிங்கிட் வழங்கும் திட்டம் சுமுக மாக நடைபெற்று வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட குடும்ப தலைவரின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு 150 ரிங்கிட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பல பிள்ளைகளை வைத்துள்ள பெற்றோர்களுக்கு குடும்ப சுமையும் குறையலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

இந்த புட்சால் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தில் தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளி, இரண்டாவது இடத்தில் முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி, மூன்றாவது இடத்தில் சித்தியவான் மகா கணேசா தமிழ்ப்பள்ளி மற்றும் நான்காவது இடத்தில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிகள் வெற்றி பெற்றன பெண்கள் பிரிவின் வெற்றியாளராக முதல் இடத்தில் புருவாஸ்தமிழ்ப்பள்ளி வென்றது. இரண்டாவது இடத்தில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி, மூன்றாவது இடத்தில் சுங்கை வாங்கி தமிழ்ப்பள்ளியும் நான்காவது இடத்தில் வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் வென்றன.

Pertandingan futsal Tamil peringkat negeri Perak julung kali diadakan. SJKT Teluk Intan Bharathi dan SJKT Bruas muncul juara kategori lelaki dan perempuan. Pasukan terbaik akan wakili Perak ke peringkat kebangsaan di Kedah. Bantuan kewangan turut disalurkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *