மாமன்னரின் உத்தரவை மதிக்க வேண்டும்! - நஜிப் வீட்டுக் காவல் தாமதம் குறித்து இஸ்தானா நெகாரா
- Shan Siva
- 08 Nov, 2026
கோலாலம்பூர், நவ 8: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் விவகாரத்தில் மாமன்னரின் உத்தரவை மதிக்க வேண்டும் என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது.
நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வீட்டுக் காவலுக்கு மாற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டத்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டது.
இதற்குப் பதிலளித்துள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்புக்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு உத்தரவு தெளிவாக இருப்பதாகவும், அதன் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை மதித்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

