இரட்டைக் கோபுரத்தைச் சுற்றிய பிரமாண்ட டிராகன்!

- Shan Siva
- 30 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 30: சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் புகழ்பெற்ற
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை ஒளி வடிவ பிரமாண்ட டிராகன் சுற்றி வருவது போன்ற காட்சி
பிரமிப்பை ஏற்படுத்தியது.
ட்ரோன்
ஒளிக்காட்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட திகைப்பூட்டும் இந்த சிவப்பு டிராகன்,
நகர மையத்தில் சீனப் புத்தாண்டு
கொண்டாட்டத்தின் போது கோபுரங்கள் வழியாக சுற்றியபடி பார்வையாளர்களை மயக்கியது.
மலேசியாவில்
இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் நிகழ்ச்சி இதுவாகும், இதில் 1,200க்கும் மேற்பட்ட
ட்ரோன்கள் இடம்பெற்றன.
சனிக்கிழமை
நடைபெற்ற இந்த நிகழ்வு, மலேசியா-சீனா
இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக்
கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *